Sunday, November 14, 2010

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்....!






உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..! 

Monday, November 8, 2010

காதலித்துப் பார்!

                                            காதலித்துப் பார்!


உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!


இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்! 

நட்பு

                             நட்பு என்பது 
சூரியன் போல்
எல்லா நாளும் 
பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது 
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும் 
நிறைந்து இருக்கும்

Friday, November 5, 2010

வாழ்க்கை

tho;f;if vd;gJ xU Gj;jfk; - mjpy;
xU gf;fk; kl;Lk; tho;f;ifay;y
xt;nthU gf;fq;fshdNj tho;f;if

cd; Ngdhitf; $l %bitf;fhNj

mij jpwf;Fk; tpdhbfspy; $l - eP
vOj epidj;jij kwe;J tplf; $Lk;

ele;jij Mapuk; Kiw Nahrpg;gij tpl

elf;fg; Nghtij xU Kiw Nahrp -eP
tho;f;ifapy; Kd;NdWtha;

ஆறாவது விரல் ஆக்கினை தருமா?

தொலைபேசி என்றாலே புதினமாகப் பார்த்த காலம் போய், இன்று ஆளுக்கு ஒன்று என்று ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருடைய கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு கைபேசி போதாதென்று, ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்களின் இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடிய Dual Sim வசதியுடைய கைபேசிகளும் பாவனைக்கு வந்துவிட்டன.
இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய பாய்ச்சலாக, இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று சிம்களுடன் இயங்கும் நவீன கைபேசிகளை சந்தைக்கு விட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கக்கூடிய கைபேசியாக Intex In 5030 வெளிவந்துள்ளது.
ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயங்கக்கூடியதாக இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை கைபேசியை எங்காவது தொலைத்துவிட்டீர்களென்றால் அதனைத் தேடிக் கண்டறியும் MobileTracker தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.
எஃப்.எம். றேடியோ, எம்.பி.3 பிளேயர், கமரா என்று, டிஜிடல் தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் உள்ளங்கைக்குள் சுருக்கிக்கொண்டிருக்கும் கைபேசிகள்,  இன்னுமின்னும் பல சாத்தியங்களையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய கணினியையே தன்னுள் அடக்கியுள்ள Smart Phones உம் இப்போது அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.
மிக அண்மைக்காலம் வரையில் தொலைபேசிப் பாவனையே அரிதாயிருந்த யாழ்ப்பாணத்துக்கு உலக சந்தையில் மிகப் பிந்திய இவ்வாறான கைபேசி வகைகள் எல்லாம் இப்போது தாராளமாகக் கிடைக்கிறது. Nokia, Motorola, Samsung, sony Erricson, Vodafon என்று எல்லா வகையான கைபேசி வகைகளும் இங்கே பெருகிக் கிடக்கின்றன.
Dialog, Mobitel, Huch, Edisalate எனப் பெருகிய கைபேசி சேவை வழங்குநர்களின் பரவலுக்கு மகுடனம் சூட்டுவதுபோல் Airtelநிறுவனமும் தற்போது வடமாகாணத்துக்குத் தனது சேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. யாழ் குடாநாடெங்கும் 20க்கும் மேற்பட்ட தொலைபேசி பரிவர்த்தனை கோபுரங்களை Airtelநிறுவனம் நிர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தனியார் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கிடையிலான போட்டி காரணமாக, பாவனையாளர்களுக்குக் குஷிதான்.  அழைப்புக் கட்டணங்கள் வீழ்ச்சியடைந்துவரும் அதேவேளை, GPRS, Broadband,Wifi வசதிகளும் இதனால், மிகக் குறைந்த கட்டணங்களில் பாவனையாளர் கைசேர்கிறது.
Airtel நிறுவனம் மொபைல் தொலைக்காட்சி சேவையையும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் ஒரு கதை அரசல்புரசலாக இப்போது வெளியாகியிருக்கிறது,
கைபேசிகளின் இந்தப் பரவலால் அது இப்போது மனிதர்களின் ஆறாவது விரலாகிவிட்டது.
வரமா? சாபமா?
இந்தளவுக்கு எம்மிடையே பரவலாகியிருக்கும் கைபேசிப் பாவனை, உலகளவில் சாத்தியமாகியிருக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் எம் கைசேர்த்திருப்பது ஒரு வரமேயாயினும், கூடவே கைபேசிப் பாவனை புதிய சில சிக்கல்களையும் கொண்டுவந்துள்ளது. நீண்டகாலமாக இல்லாதிருந்து இப்போது திடீரெனப் பரவியிருக்கும் இந்த மொபைல் மேனியா, சிறு குழந்தைகள் முதல் பாட்டன் பாட்டியர் வரையில் அனைவரது கைகளிலும் தவழ்கிறது.
தொழில்நுட்பம் இந்தளவுக்கு எங்களுக்குக் கைவரப்பெற்றிருக்குமளவுக்கு, எதை, எதற்கு, எப்படி நாகரீகமாகப் பயன்படுத்துவது என்பது சரியாக வரவில்லை. பொது இடங்களில் பெண்களைப் படம் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும், ஆபாசக் காட்சிகளை பரிமாறுவதும் என்று, வரத்தைச் சாபமாக்கும் காரியங்கள் நிறையவே இங்கு நடந்தேறுகின்றன.
இவ்வாறு, நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமளித்திருக்கும் பல சாத்தியங்களையும் சாபங்களாக்காமல் சரிவரப் பயன்படுத்துவதே நமக்கும், பிறருக்கும் – இந்தத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கும் – செய்யும் கைங்கரியமாகும்.

காதல் ஒரு கணக்கு

காதல் என்பதென்ன? காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல்! ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும்.
‘மலரினும் மெல்லிது காமம்’ - என்றுதான் வள்ளுவன் குறிப்பிடுவான்.
காதலுக்குத் தனி அகராதி உண்டு அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும். பேருந்தில் ‘ஐயோ நிக்கிறாங்களே.. என்று எழுந்து இடம் கொடுத்தவனும்.. கும்பலாக நிற்கிறபோது, இந்த புக்ûஸக் கொஞ்சம் வெச்சிருக்கீங்களா...?‘ என்று தந்தபோது தயங்காமல் வாங்கி வைத்திருந்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தன்னை உணரும் பருவத்தில், இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில், தான் கவனிக்கப்படுகிறோம், எனும்போது, மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது!.
படித்து முடித்த பிறகு குடும்பச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் சோர்ந்து போகும்போது, ’எப்படி இவ்வளவும் தாங்கறீங்க...?’ என்று ஆறுதல் வார்த்தைகள் பேசியவர் காதலனாக /காதலியாகக் கருதப்படுவதுண்டு. ‘இன்னாரோடு தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டால், காலம் முழுவதும் காப்பாற்றுவார்’ என்று பெண்ணின் நம்பிக்கையும் ‘இவள் என் மனம்போல் பணிவிடைகள் செய்வாள்’ என்று ஆணின் நம்பிக்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அவர்கள் லட்சியக் காதல்களாகி விடுவதும் உண்டு!
இந்த மூன்று நிலைகளிலும் இணைத்துக் கொள்கிற, இணைந்துகொள்ள விரும்புகிற உணர்வைக் காதல் என்று பொதுப்படையாகச் சொல்கிறார்கள்!. காதலுக்கு மட்டும் தனி மரியாதை! வேலைவெட்டியில்லாத கவிதைகளும் வியாபாரம் பண்ணுகிற சினிமாக்களும் பொழுதைக் கொல்லுகிற கதைகளும் சேர்ந்து செய்த காரியம் இது. ‘காதல் பற்றி இனிமேல் புத்தகம் போடக்கூடாது... கவிதை எழுதக்கூடாது.. பிரசாரம் செய்யக் கூடாது..’ என்று ஒரு தடைச்சட்டம் போடுவது நல்லது.
நம் அறிவு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படட்டுமே! திரைப்படங்களில் அவளும் அவனும் தெரியாமல் மோதிக் கொண்டவுடன், உடம்பின் உரசலில் காதல் பிறந்துவிடுகிறது அவனோ, அவளோ கோபத்தின் வேகத்தில் அறைந்துகொள்ள... கண்ணீருக்குப் பதில் காதல் வந்துவிடுகிறது! உடல் ஊனமுற்ற ஆணின் மீதும் பெற்றோரால கொடுமைப் படுத்தப்படும் பெண்ணின் மீதும் ஏற்படும் இரக்கமும்பூடக் காதலாகச் சொல்லப்படு கிறது! ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள் வதே சமயங்களில் காதலாகப் பார்க்கப் படுகிறது.
மற்றவர்களை விட்டுவிட்டுப் பெற்றவர்களைக் கேட்போம். மகள் காதலித்தால் ‘எம் பொண்ணு சின்னக் குழந்தைங்க.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படியோ ஏமாந்திருக்கு...’ என்பார்கள் மகனாக இருந்தால், ‘ எம் புள்ள யாரையும் நிமிர்ந்து பார்க்காத பையன்... பாவி மக... என்ன மருந்து மாயம் வெச்சாளோ..? ‘ என்பார்கள். இப்போது காதல் வசப்பட்டவர் களிடம் வருவோம். அந்தப் பையன் அவ்வளவு சரியில்லையே.’ என்று சொல்லிப் பாருங்கள். அவரைப் பற்றி எனக்குத்தான் தெரியும்.. நல்லவர் தெரியுமா? என்பாள் பெண்.
‘இந்தப் பொண்ணு வேணாம் விட்டுடுடா.’. என்று சொல்லுங்கள். அவ என்னைத்தான் நம்பியிருக்கா.. விட்டுடுனு ஈஸியா சொல்றீங்களே... என்பான், பெற்றவர் களுக்குப் பத்து ரூபாய் கூடச் சம்பாதித்துக் கொடுக்காத மகன்! இந்தக் கிளர்ச்சிக்கு வயது வித்தியாசமே கிடையாது! ‘நாற்பத்தைந்து வயது மனிதர்மீது வருவது அறிவுபூர்வமான காதல்’ என்பாள் இருபது வயசுப்பெண். சரி, அப்படியென்றால் அந்த மனிதருக்கு இந்தச் சின்னப் பெண்மீது ஏற்படுவது என்ன...? ‘
அவருக்குப் பொண்டாட்டி சரியில்லப்பா.. அதான் பாசம் காட்டுன இடத்துல சாஞ்சுட்டாரு..’ என்று பழியை அவர் மனைவிமீது தூக்கிப் போட்டால், அந்தக் காதலுக்கும்(!) நியாயம் கிடைத்து விடுகிற உலகம் இது!
ரவியும் ஜான்சிராணியும் காதலர்கள். பாதுகாப்புக்காகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு எப்போதும் போலவே அவரவர் வீட்டில் இருந்தார்கள். அப்பாவோடு ஜான்சி அமெரிக்கா செல்ல நேர்ந்தது: ‘அப்பாகிட்ட பேசி சரி பண்றேன் ‘ என்று ரவியிடம் சொல்லிவிட்டுத் தான் போனாள் ஜான்சி.. ஆனால் அங்கே போனவள். அப்பாவின் விருப்பப்படி இன்னொரு திருமணத்துக்குச் சம்மதித்தாள். பைத்தியம் பிடித்த ரவி. ‘என் மாமனார்,என் மனைவியை மறைத்து வைத்திருக்கிறார் ‘ என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான்.
இரண்டு லட்சம் செலவு செய்து மகளோடு கோர்ட்டுக்கு வந்தார் அப்பா. கோர்ட்டில் ரவிவையைப் பார்த்து. ‘இவரை யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனாள் ஜான்சி. இதே மாதிரி இன்னொரு வழக்கு... கோர்ட்டுக்கு அமுதா வரும்போது அம்மா, அப்பா.. அத்தை மாமா என்று உறவுப் பட்டாளமே பாதுகாப்பாகக் கூட வந்தது. அமைதியாக நின்றாள் அமுதா. இவரை உனக்குத் தெரியுமா..? என்று மகேந்திரனைக் காட்டி நீதிபதி கேட்டபோது. அடையாளம் பார்ப்பதற்காக அருகில் போனாள். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. முன்கூட்டிப் போட்ட திட்டம் இல்லை. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு. அத்தனை கும்பலையும் மீறித் தடதடவென்று பிடித்தார்கள் ஓட்டம்...
பெற்றோர், போலீஸ் வழக்கறிஞர்கள், நீதிபதி, கோர்ட் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ஒரே ஓட்டம்தான்!. உணர்ச்சிவசத்தில் அதிரடியாக ஏதாவது செய்துவிட்டு பிறகு வருந்துவதும் திருந்துவதும்தான் பொதுவான காட்சிகளாகக் கண்ணில் படுகின்றன. மற்றபடி காதல் என்பது சாதாரண ஓர் உணர்வு மனதுக்கு இசைந்த ஒருவரோடு உடலாலும் இணைந்துவிட ஆசைப்படும் ஓர் உணர்ச்சி.. அவ்வளவுதான்! அந்தவிதமான உணர்வு, ஆசை வாழ்க்கையில் ஒரே முறை, ஒரே ஒருவர்மீது மட்டுமே வரும் என்பதெல்லாம், காதலியின் கால் மண்ணில் பட்டவுடன் காதலனுக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி மிகைப்படுத்தல்தான்!
ஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம், அமைப்புமுறை இப்படிப் பல காரணங்களுக்காகக் காதல் என்பது ஒருவரைத் தவிர இன்னொருவர்மீது ஏற்படாது என்று கொஞ்சம் அதிகமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், இரண்டாவது திருமணம் செய்கிற ஆண்கள்மீது ஏன் கோபப்படுகிறீர்கள் எனலாம்.? என் வாழ்க்கையில்... இலக்கிய மேடைகளிலும் திராவிடர் கழக மேடைகளிலும் எதிலுமே சமரசம் செய்து கொள்ளாத, கொள்கைப் பிடிவாதம் கொண்ட ஒரு போராட்டக்காரப் பெண்ணாகத்தான் நான் அறிமுகமானேன்... ‘இவரா...அவரா...?’ என்றெல்லாம் பலரோடு பேசப்பட்டு, யாரோடும் நான் இணைந்து வாழ முடியாது! என்று முடிவு செய்திருந்தேன்.
அந்த நேரத்தில் என்னைப் பற்றி ‘விடுதலை’ வைத்திருந்த கவலை, அக்கறை என்னைக் கவனிக்க வைத்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளாக நானும் விடுதலையும் ஒரே கொள்கையுடைய நண்பர்களாக இருந்தோம். ‘எத்தனையோ பொண்ணுங்க பொதுவாழ்க்கைக்கு வந்திருந்தாங்க. அவங்கள்ல பலர், கொள்கையே இல்லாம வெறும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவே நின்னுட்டதுண்டு. கல்யாணம் பண்ணிட்டு, அப்படியே மெள்ள விலகிப் போனவங்களும் உண்டு.
அருள்மொழிங்கிற நெருப்பும் அப்படி அணைஞ்சு போயிடக்கூடாது. திருமணம். குழந்தை குடும்பம்கிற எந்த மாற்றங்களாலும் அருள்மொழி தொலைஞ்சு போயிடக் கூடாது என்கிற அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்தது. நம்முடைய உணர்வுகளையும் வாழ்க்கைமுறைகளையும் மதிக்கிற இந்த நண்பரோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது, மற்றபடி இதில் காதல் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை! பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும்தான் எங்களை இணைத்தது!
காதல் என்பது,மனமும் உடலும் போடும் சிக்கலான கணக்கு என்பதுதான் என் முடிவு ‘காதல் அடைதல் உயிரியற்கை‘ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியார் சொல்கிறார்... ‘காதல் என்பது தெய்வீகமானது என்று சொல்வதிலிருந்தே இரண்டுமே பொய் என்று புரிந்துகொள்ளலாம்

காதல் ஒரு போதை விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.
காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில் தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்.
இந்நிகழ்வின்போது 'திடீரென சிறப்பாக உணரச்செய்யும்' டோபைன், ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள் த}ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்.
பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்.
இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஓர்டிக் கூறுகிறார்.
சரி, காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு என்ன பதில்?
'அது மூளையென்றுதான் நான் கூறுவேன். ஆனால் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்களை ஏற்பட முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும்' என்கிறார் பேராசிரியர் ஓர்டிக்.

Friday, October 15, 2010

சிரிப்பு ஒரு மாமருந்து


smile always
உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.
எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம். பிuனீணீக்ஷீs சிறீuதீ சிரிப்பு சங்கத்தில் சேரலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
து தேவை முடிவு செய்யுங்கள் சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம். நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.
இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி.அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும். நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.
நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும்.செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும்.சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்.'சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம் சிறப்பான உத்திகள்.கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.
வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள்.அதற்கான வழி தெரியவில்லையா? இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.

Thursday, October 14, 2010

Facebookஇல் தவிர்க்க வேண்டியவை


Facebook, Twitter போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களின்(Social Networks) ஆதிக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படும் காலமிது. Facebook, Twitter, Myspace, Freindster, Urbanchat, Black Planet, Hi 5என நூற்றுக்கணக்கான சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்கள் இன்று பாவனையில் உள்ளன.
இந்த சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அவற்றில் நாம் வழங்கும் தகவல்கள் மற்றும் அவற்றின் ஊடாகப் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் எமக்கே ஆபத்தாக அமைந்துவிடவும் கூடும். எனவே, எமக்கு ஆபத்தாக அமையும் எனக் கருதும் விடயங்களைக் கண்டறிந்து தவிர்த்தால் நல்லது தானே?
தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றம்
தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை Facebook Wall மூலம் பரிமாறுவதைத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு Wall இல் கருத்துக்களையோ அல்லது படங்களையோ பரிமாறிக் கொள்வதால் அவற்றை அனைவரும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். இதுவே நமக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம். எனவே, கருத்துக்களையோ அல்லது படங்களையோ Wall மூலம் பகிர்ந்துகொள்ளாமல், அவற்றைத் தனிப்பட்ட Message களாகப் பரிமாறிக்கொள்ளலாம்.
திட்டங்களைப் பகிர்தல்
பிறந்தநாள் விழா, விருந்து போன்றவற்றுக்கான அழைப்புக்களை அனைவரும் பார்க்கக் கூடியவாறாக வெளியிடுவதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் நண்பர்களுக்கிடையில் மனக்கசப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தொடர்புபட்ட வலைத்தளங்கள்
Facebook போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது ஏனைய வலைத்தளங்களையும் இணைத்திருப்போம். சிலவேளைகளில் இது எமது வேலைகளுக்கோ அல்லது எமது நற்பெயருக்கோ களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துவிடும்.
உதாரணமாக, வேலைக்குக் கள்ளம்போட்டு விருந்தொன்றுக்குச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஞாபக மறதியால் விருத்தில் எடுத்த ஒளிப்படமொன்றை ஃபேஸ் புக்கில் இணைத்து விட்டீர்களென்றால், உங்கள் நிறுவன அதிபரோ, மனேஜரோ அதனை உங்கள் Facebook கணக்கிலுள்ள பிறிதொரு இணையத்தள இணைப்பின் மூலம் பார்த்துவிட்டால் அதோ கதிதான்….!
தொழில்ரீதியான தகவல்கள்
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கப் போகின்றேன் அல்லது எனது நிறுவனத்தில் இவ்வாறான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்ற தகவல்களை Facebookல் வெளியிட்டால் போட்டியாளர்களை உஷாரடையச் செய்து உங்கள் திட்டத்திற்கும் உலைவைத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பகிரங்கப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.
குடும்பத் தகவல்கள்
பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதும் சிலவேளை எமக்கு வில்லங்கத்தைத் தரலாம். உதாரணமாக, திருமணமான ஒருவர் “எனது கணவர் கொழும்பு சென்றுள்ளார். தனியாக இருப்பது கடினமாக உள்ளது” என தனது Facebookல் எழுதுவாராயின் அது அவருக்கே ஆபத்தைத் தேடிக்கொடுத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பரிமாறுவதைத் தவிர்க்கலாம்.
வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள்
நூற்றுக்கணக்கானவர்கள் நாளாந்தம் பார்க்கக்கூடிய சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. கொள்ளைக்காரர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் வெற்றிலை பாக்குத் தட்டம் வைத்து வரவேற்றதுபோல் இது ஆகிவிடும்.
தனிப்பட்ட நிதி விடயங்கள்
தனிப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் நிதி தொடர்புபட்ட விடயங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வது தவிர்க்கப்படவேண்டும்.
கடவுச் சொற்ளை நண்பர்களுடன் பகிர்தல்
எமது கணக்குகளுக்கான கடவுச் சொற்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.  உதாரணமாக, Facebook கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியொன்றை அவசரமாகப் பார்த்துக் கூறுமாறு இணையத் தொடர்புள்ள நண்பர் ஒருவரிடம் Facebookன் கடவுச் சொல்லை வழங்குவோமாயின் அது வில்லங்கத்தை விலைக்கு வாங்கியதுபோல் அமைந்துவிடலாம்...

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் புதிய iPhone

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன.

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் புதிய iPhone

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன.

ஒல்லாந்தர் கால பீரங்கிக் குண்டுகள் யாழ்.கோட்டையில் இருந்து மீட்பு..

யாழ்.கோட்டையின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து
ஒல்லாந்தர் காலத்துப் பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டையின் புனரமைப்புப் பணியின் போது
தொல்லியல் பொருள்கள் ஏதாவது இருக்கின்றவா என்பதைக் கண்டு பிடிப்பதில்
ஆராச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் போதே இந்தக் குண்டுகள் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் சுற்று மதில்களைப் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இடிக்கப்பட்ட சில இடங்களில் ஒல்லாந்தர் பாவித்த பழைமை வாய்ந்த பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைத் தோண்டி புனரமைக்கும் பணிகள் இந்த வருட
இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த அகழி புனரமைப்புக்கு முன்னர்
அப்பகுதியில் வெடி பொருள்கள் இருக்கின்றனவா என்ற சோதனை நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Monday, October 11, 2010

Tamildict.com


ek;kpy; gyUf;F Mq;fpy nrhw;fSf;F jkpo; mh;j;jk; fz;Lgpbg;gjpy; ngUk; rpf;fyhfj;jhd; cs;sJ. mtrukhf xU nra;jpia ehk; xUtUf;F mDg;Gtjw;fhf jahh;nra;Jnfhz;BUg;Nghk; ,ilapy; rpy nrhw;fSf;F mfuhjpia Gul;Lgth; ek;kpy; gyh; ,Uf;fpd;Nwhk;. ,y;yhtpl;lhy; Mq;fpyj;jpy; xU kpd;dQ;ry; te;jhy; mjDs; Ghpahj Mq;fpy nrhw;fSf;fhf mfuhjpia Gul;LNthh; ek;;kpy; gyh; ,Uf;fpd;Nwhk;. ftiyia tpLq;fs; ,J Nghd;w gpur;ridfSf;F jPh;T jUfpd;wJ Tamildict.com  vd;fpd;w kpd;dfuhjp.
 Tamildict.com  ,izajsk; vd;why; vd;d? mij vt;thW gad;gLj;JtJ? vd;w Nfs;tp cq;fs; kdjpy; Njhd;wyhk;> ,e;j Tamildict.com  ,izajsk; vd;gJ xU “online kpd;dfuhjp ,jidePq;fs; Download nra;Jnfhs;s KbahJ ,jid ePq;fs; online *ykhfj;jhd; gad;;gLj;jKbAk;.  www.tamildict.com  vd;w ,izajsj;jpd; Clhf nry;tjd; %yk; ,jd; gaid ngw;Wf;nfhs;syhk;. ,q;F jkpopy; rpwg;gk;rkhf jl;lr;Rtrjpfs; fhzg;gLfpd;wJ..
 Tamildict.com ,izaj;jpy; Clhf Mq;fpyk;-jkpo;> jkpo;-Mq;fpyk; mh;j;jq;fs; kl;Lky;y N[h;kd;-jkpo; nkhopfspd; mh;j;jq;fisAk; fz;lwpayhk;.   


மதராசபட்டினம்

நான் எதிர்பார்த்த படங்களில் ஒன்று இது. நன்றாக இருக்கிறது.அருமையான படம்.தமிழில் ஒரு டைட்டானிக். காதல் ஒரு காற்று போல.. யாரையும், எப்போது வேண்டுமானாலும் தீண்டிச் செல்லும்.

புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group